- வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்ற .1500 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர கையும் களவுமாக கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருளானந்த நகரில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 45). இவர் தஞ்சை அருகே அய்யம்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
பாபநாசம் சூலமங்கலம் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(36). தனது தாயார் ஜெயமணி பெயரில் உள்ள வீட்டின் வணிக மின் இணைப்பை வீட்டு மின் இணைப்பாக மாற்றி தரக்கோரி அய்யம்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார்.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி மணிகண்டனை அணுகும்போது
மணிகண்டன் லஞ்சம் கேட்டுள்ளார்.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலமுருகன் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சரவணன், அருண் பிரசாத் மற்றும் போலீசார் அறிவுறுத்தல் படி பாலமுருகன் ரசாயனம் தடவிய 1500 ரூபாய் மணிகண்டனிடம் கொடுக்க வந்துள்ளார்.
அப்போது மணிகண்டன் வயரிங் ஒப்பந்ததாரர் சுதாகரிம் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/case-seeking-registration-of-samsung-labor-union-opposition-by-samsung/
இதையடுத்து மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனே மணிகண்டன் மற்றும் சுதாகரை கையும் களவுமாக பிடித்தனர்.
இரண்டு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.