நீலகிரியில் கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு..!

2 Min Read

நீலகிரி அருகே கேரட் கழுவும் இந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கேரட் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட கேரட்களை மூட்டைகளாக கட்டி, கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இயந்திரங்களில் முழுமையாக கழுவிய பின், சுத்தம் செய்யப்பட்ட கேரட் மூட்டைகளாக கட்டப்பட்டு, லாரிகளில் ஏற்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர்

இந்நிலையில் உதகை அருகே உள்ள முள்ளிக்கூர் பகுதியில் இயந்திரம் மூலம் கேரட் சுத்தம் செய்யப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு தம்பா வயது 35 என்ற இளைஞர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று டிசம்பர் 10 ஆம் தேதி வழக்கம் போல் தம்பா உள்ளிட்ட ஊழியர்கள் கேரட் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கேரட் கழுவும் இயந்திரம், தம்பாவின் தலை மற்றும் கை சிக்கிக் கொண்டது.

கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞர்

இதை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சத்தம் போடவே உடனடியாக இயந்திரம் நிறுத்தப்பட்டது பின்னர் கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கிய தம்பாவை மீட்டு ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அங்கிருந்த ஊழியர்கள் கார் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற உதகை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

தொழிலாளி ஒருவர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தது சக தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த கேரட் இயந்திரத்தில் இருந்து வரும் ஆபத்தான கழிவுநீரை சுத்திகரிக்கப்படாமல் மழைநீர் கால்வாய்களில் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

 

Share This Article
Leave a review