திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் அருகே கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை. அந்த இளைஞர் தற்கொலைக்கு காரணமான நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு. அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் தினேஷ்குமார் வயது ( 30 ). இவர் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் பணம் தேவைக்காக ரமேஷ் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாகவும், அந்த பெற்ற கடனுக்கு பல மடங்கு வட்டி செலுத்தியும், தினேஷ்குமாரின் வீட்டில் இருந்த இரண்டு இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதாகவும், தினேஷ்குமாரின் வீட்டு பத்திரத்தை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பெற்ற கடனால் எல்லாவற்றிலும் பறிபோய் மணமுடைந்த தினேஷ்குமார், கடந்த 8 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர்கள் உடனடியாக தினேஷ்குமார் உடலை மீட்டு அருகில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து நன்னிலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த தினேஷ்குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்த ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.