ஒரு தலை பட்சமாக காதலித்த பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த மூதாட்டியை எரித்து கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
கடலூர் மாவட்டம், பெண்ணடத்தை அடுத்த குருக்கத்தஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மனைவி அம்பிகா வயது 67. இவருக்கு சுசிலா என்ற மகளும் வீரமணி, வீரபாண்டியன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். வீரபாண்டியன் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனால் அம்பிகா வீரபாண்டியன் வீட்டில் இரவு உறங்கச் செல்வது வழக்கம். இதேபோல் 9-ம் தேதி அன்று அம்பிகா இரவு வீரபாண்டியன் வீட்டில் உறங்கியுள்ளார். இது அடுத்த மறுநாள் 10-ம் தேதி காலை வீரமணி தனது குடும்பத்துடன் தனது அத்தை மகளும் அம்பிகாவின் நாத்தனார் மகள் நிச்சயதார்த்த விழாவிற்கு பெண்ணாடம் பெரிய கோவிலுக்கு சென்று விட்டனர். அப்போது வீரபாண்டியன் வீட்டிலிருந்து கரும்புகையுடன் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரமணிக்கும் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கும் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது எரிந்த நிலையில் ரத்தக் கரையுடன் கிடந்த அம்பிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலூர் எஸ்.பி ராஜாராம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், காவியா, ரூபன்குமார் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டனர். இதில் மோப்பநாய் கூப்பர் கொலை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து அதே தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் வெற்றிவேல் வயது 29 புரோட்டா மாஸ்டர் என்பவரின் வீட்டின் முன்பு சுற்றி வந்த நிலையிலும் வெற்றிவேலனின் செல்போன் கொலை நடந்த வீட்டின் அருகில் கிடந்ததே அவர் வாங்கிச் சென்றதன் அடிப்படையிலும் சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அம்பிகாவின் நாத்தனார் மகளுக்கு நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் பெண்ணாடம் பெரிய கோவிலில் நடந்துள்ளது. அந்தப் பெண்ணை வெற்றிவேல் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்பிகாவின் நாத்தனார் மகளை தனக்கு திருமணம் செய்து தரும்படி அம்பிகாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அம்பிகா மறுத்துள்ளார். பின்னர் மதுபோதையில் 10-ம் தேதி இரவு அங்கு சென்ற வெற்றிவேல் அம்பிகாவிடம் அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு மீண்டும் கேட்டுள்ளார். அதற்கு அம்பிகா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வெற்றிவேல் அம்பிகைவை கொன்று விட்டால் நிச்சயதார்த்தம் நின்று விடும் என எண்ணி இரும்பு கம்பியால் அம்பிகா தலையில் அடித்துள்ளார்.
இதில் நிலை குலைந்து சரிந்த அம்பிகா சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி உயிருடன் எரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.