இராசிபுரம் அருகே உங்களுக்கு முடிவெட்ட முடியாது – இது ஊர் கட்டுப்பாடு..!

1 Min Read

இராசிபுரம் அருகே உங்களுக்கு முடிவெட்ட முடியாது. இது ஊர் கட்டுப்பாடு அதை மீறி வெட்டினால் கடையை நடத்த முடியாது என ஊர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காணலாம்

- Advertisement -
Ad imageAd image

நாமக்கல் மாவட்டம், அடுத்த ராசிபுரம் அருகே திருமலைப்பட்டி காமராஜ் நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருள்பாண்டியன் வயது 33. இவர் இந்த பகுதியில் கடந்த 33 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இராசிபுரம் அருகே உங்களுக்கு முடிவெட்ட முடியாது – இது ஊர் கட்டுப்பாடு

இவர் இந்த பகுதியில் கடந்த 33 ஆண்டுகளாக அருள்பாண்டியன் தனது மூத்த மகனுக்கு முடிதிருத்தம் செய்ய தெவ்வாய்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள கிட்டு சலுனுக்கு சென்றுள்ளார்.

அதன் உரிமையாளர் சிட்டு என்பவர் தான் கோவிலுக்கு செல்வதால் கடையை மூடுவதாக தெரிவித்துள்ளார். இதனால், வீடு திரும்பிய அருள்பாண்டியன் சிறிது நேரம் கழித்து மீண்டும் சலூன் பக்கமாக சென்றுள்ளார்.

இராசிபுரம் அருகே உங்களுக்கு முடிவெட்ட முடியாது – இது ஊர் கட்டுப்பாடு

அப்போது சலூன் திறந்து இருந்த நிலையில், வேறு ஒரு நபருக்கு முடி வெட்டி கொண்டிருந்தார். இந்த நிலையில், அருள்பாண்டியன் தனது மகனுக்கு முடி வெட்ட கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சலுன் கடை உரிமையாளர் சிட்டு, உங்களுக்கு முடி வெட்ட முடியாது, இது ஊர் கட்டுப்பாடு அதை மீறி உங்களுக்கு முடிவெட்டினால் கடை நடத்தக்கூடாது என பஞ்சாயத்தில் கூறியதாக தெரிவித்தார்.

புதுச்சத்திரம் காவல் நிலையம்

இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் அருள்பாண்டியன் புகார் அளித்தார். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review