ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்காரில் காங்கிரஸிடம் இருந்து பாரதிய ஜனதா ஆட்சியை பறித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த மாதம் 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இடமிருந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை விட அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா வெற்றியை செய்தியை அறிந்தவுடன் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாடிய மகழ்ந்தனர்.
காங்கிரசின் மோசமான ஆட்சியை நிராகரித்து பாரதிய ஜனதாவின் நல்லாட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே கருத்து தெரிவித்துள்ளார். முதல் மந்திரி வேட்பாளர் என யாரையும் பாரதிய ஜனதா அறிவிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தடவை அப்பதவியில் இருந்த வசுந்தரா ராஜே முதல் மந்திரி போட்டியில் முன்னிலை வகித்தார். மத்திய மந்திரிகள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன் ராம் மேக் வால், மாநில பாரதிய ஜனதா தலைவர் சி.பி ஜோஷி, தியாகுமாரி, மகந்த் பாலக்நாத் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.

சேகவாத் ராஜபுத்திரர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அர்ஜுன் ராம் மேக்பால் பட்டியல் இனத்தவர் பாலக்நாத் யாதவர் ஆவார். அவர்களுக்கு சமூக பின்னணி ஆதரவாக உள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா, அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் கட்சி தலைமையின் நம்பிக்கையை பெற்றவர் என்பதாலும் அவரும் இயல்பான போட்டியாளர்களாக கருதப்படுகிறார். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் அதிகம் கருத்தில் கொண்டு முதல் மந்திரி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கிறது.
சத்தீஸ்கார் மாநிலம் உருவானதில் இருந்து 2003 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு பாரதிய ஜனதா ஆட்சி செய்து வந்தது 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் இப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து பாரதி ஜனதா ஆட்சியை பறித்துள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பிரதமர் மோடி பங்கேற்ற 5 பொதுக்கூட்டங்கள் பாரதிய ஜனதா வெற்றிக்கு வழி வகுத்ததாக கருதப்படுகிறது. மகாதேவ் செயலி மூலம் நடந்த ஊழல் பற்றி பேசி முதல் மந்திரி பூபேஸ் பாகல் மீது அவர் குற்றம் சாட்டினார்.

அந்த பிரச்சாரம் ஈடுபட்டது. சத்தீஸ்காரர்களும், முதல் மந்திரி வேட்பாளரை பாரதிய ஜனதா அறிவிக்கவில்லை. அங்கு முன்னாள் முதல் மந்திரி ராமன்சிங், மாநில பாரதிய ஜனதா தலைவர் அருண்குமார் சாவ், எதிர்க்கட்சித் தலைவர் தரம்லால், கவுசிக், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓ.பி சவுத்ரி ஆகியோர் முதல் மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்களின் ராமன்சிங்கை தவிர மற்ற மூன்று பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள். பாரதிய ஜனதா வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகள் முக்கிய காரணம் என்பதால் எவ்வித அழுத்தமும் இன்றி முதல் மந்திரியை பாரதிய ஜனதா சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.