பணிமாறுதல் நடவடிக்கை எடுத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
விருதுநகரில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணி மாறுதல் செய்யும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள கேட்டின் மீது ஏறி முற்றுகையிட்டு போராட்டம் -போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக விருதுநகர் மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில், அங்கன்வாடி மையங்களில் வேலை செய்யும் கர்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என அனைத்து தரப்பினரும் பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார். இதனை அடுத்து ஒரு சில மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணியும் நடந்து முடிந்துள்ளது என்றும், இது சம்மந்தமாக கண்டித்து அங்கன்வாடி பணியாளர்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தினர்.
இதனால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சில பேருக்கு பணிமாறுதல் வழங்கி உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஊழியர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கடந்த சில தினங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கடந்த சில தினங்களாக அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்த மாவட்ட ஆட்சியர் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்பொழுது போராட்டத்தில் விருதுநகர் மாவட்ட காவல்துறைக்கும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் காவல்துறையினருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை கடந்து அடுத்து அங்கன் வாடி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.