தொகுப்பு பட்டியலில் கரும்புடன் மண்பானையும் சேர்க்க வேண்டும் தொழிலாளர்களின் கோரிக்கை..!

2 Min Read

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்புகள் தயார் நிலையில் உள்ளது. தொகுப்பு பட்டியலில் கரும்புடன் மண்பானையில் சேர்க்க வேண்டும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் முக்கியமாக மண் பானையும் பன்னீர் கரும்பும் இடம்பெற்று வருகிறது. மண்பானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதற்காக விவசாயிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சீசனுக்காக பன்னீர் கரும்புகள் சாகுபடியிலும் மண் பாண்ட தொழிலாளர்கள் மண் பானை தயாரிப்பிலும் ஈடுபட்டு வருவார்கள். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பன்னீர் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பிடாகம், மரகதபுரம், குச்சிபாளையம், வேலியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். செழித்து வளர்ந்துள்ள நிலையில் இன்னும் 10 நாட்களில் இந்த கரும்புகள் அறுவடை செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு

இதனிடையே அரசு பொங்கல் தொகுப்பு பொருட்களில் பன்னீர் கரும்பினையும் சேர்த்து வழங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு சாகுபடி அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்; பன்னீர் கரும்புகள் ஏக்கருக்கு சுமார் 200 கட்டுகள் வரை சாகுபடி செய்யலாம். ஒரு கட்டில் 20 கரும்புகள் வைக்கப்படும். கடந்த ஆண்டு ரூபாய் முன்னுக்கும் ஒரு கட்டு கரும்பு கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டது. கடந்த காலங்களில் அறுவடை செய்யும் கரும்புகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்போம். அப்போது முறையாக கொள்முதல் செய்யாமல் விலை போகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஏக்கருக்கு ரூபாய் 1.50 லட்சம் வரை செலவாகும் நிலையில் அரசே கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கிறது. இதனால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு சாகுபடி பரபரப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது கடந்த ஆண்டு செல்ல இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது.

தொழிலாளர்கள் கோரிக்கை

இந்த ஆண்டு எந்தவித பிரச்சனையின்றி விவசாயிகளிடம் பாரபட்சம் இன்றி கரும்புகளை கொள்முதல் செய்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதேபோல் பொங்கல் பண்டிகை முக்கிய அங்கம் வகிப்பதாக மண் பானை உள்ளது. இதனால் விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பன்னீர் கரும்புகள் அரசு இலவச தொகுப்பு பட்டியில் சேர்க்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் மண்பாண்ட தொழிலாளர்கள் நலனுக்காக இலவச தொகுப்பு பட்டியலில் மண்பானைகளும் பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்து வழங்கிட வேண்டும். இதற்காக நாங்கள் பல போராட்டங்களில் நடத்தியுள்ளோம். அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மண்பானையும் சேர்த்து வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Article
Leave a review