கந்து வட்டி கும்பல் கணவனை கடத்தி தனி அறையில் வைத்து கணவனின் செல்போன் மூலமாக மனைவியின் தொலைபேசியை தொடர்பு கொண்டு மிரட்டியதால் மனம் உடைந்த மனைவி தற்கொலை.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார் இவர் வீடு மற்றும் வணிக வளாகங்களில் சி.சி.டி.வி பொருத்தம் வேலை பார்க்க வருகிறார். இந்த நிலையில் வியாபாரம் நோக்கத்துடன் அடிக்கடி அதிக பணம் தேவைக்காக கந்து வட்டி வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்து வந்தார் பலமுறை பணம் வாங்கி அதிக வட்டியுடன் கடனை அடைத்து வந்த நிலையில் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு நாள் ஒன்றுக்கு 6000 ரூபாய் வட்டியாக கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென பணம் வர வேண்டிய இடங்களில் இருந்து பணம் வராததால் பணம் கொடுக்க தாமதம் ஆன நிலையில் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே கந்து வட்டி கும்பல் வழிமறித்து இரு சக்கர வாகனத்தை பிடுங்கிக் கொண்டு தகராறு ஈடுபட்டது. அதனை தொடர்ந்து நேற்று இரவு விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதியில் வைத்து தினேஷ்குமாரை பணம் கேட்டு ஒரு அறையில் அடைத்து வைத்து மிரட்டி உள்ளனர். இந்த நிலையில் தினேஷ்குமார் தொலைபேசி எண்ணில் இருந்து அவரது மனைவி செல்விக்கு தொடர்பு கொண்டு உனது கணவர் எங்களிடம் கடன் வாங்கி உள்ளார். அதனை உடனே தர வேண்டும் இல்லாவிட்டால் வீட்டில் வந்து அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் 15 ஆம் தேதி அன்று பணம் வர வேண்டி உள்ளது. அந்த பணம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் தினேஷ்குமார் மனைவியிடம் அசிங்கமாகவும் கந்துவட்டி கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக தினேஷ்குமாரின் மனைவி செல்வி வாக்குறுதி அளித்ததன் பேரில் தினேஷ்குமாரை விடுவித்தனர். இதனால் மனமுடைந்த செல்வி தனது இரண்டு வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு வீட்டில் தூங்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் அதிக வட்டி வாங்கியதாக கூறி மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் தினேஷ்குமார் தெரிவிக்கும் திருமணம் ஆகி 3 வருட காலம் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்தது. அப்போது கந்துவட்டி கும்பல் மீது முறையாக வழக்கு பதிவு செய்யவில்லை என்று வந்து கந்து வட்டி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். எனக்கு கூறி விருத்தாசலம் கோட்டாட்சியர் வாகனத்தை சிறை பிடித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனைவர் மீதும் முறையாக வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். விருத்தாசலம் பகுதியில் கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பது.
அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் ஏழை எளிய மக்களை பாதிக்கும் கந்து வட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி ஒரு உயிர் இழப்பு ஏற்படாமல் மாவட்ட காவல் துறையில் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.