பொங்கல் பண்டிகை முன்னிட்டு பூக்களின் விலை வரலாறு காணாத விலை உயர்வு,மல்லிகைப்பூ 4000-த்திற்கு விற்பனை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தென் தமிழகத்திலே பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது,இந்த மார்க்கெட்டுக்கு கேரளா,ஆந்திரா, கர்நாடகா பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள்,ஏற்றுமதியாளர்கள் அதேபோல கனடா,துபாய்,மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி நிறுவனங்களும் பூக்களை வாங்க வருவது வழக்கம்,இதனால் மல்லிகை செண்டு, வாடாமல்லி சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக இங்கு கிடைக்கும்,பொங்கல் பண்டிகை முன்னிட்டு நேற்று வரை 500 முதல் 1500 வரை என சராசரி அளவு விற்பனையாகி வந்த பூக்களின் விலை இன்று வரலாறு காணாத அளவு உயர்ந்து
கிலோ ஒன்றுக்கு மல்லிகை பூ – ரூ 3500 – 4000,
முல்லைப் பூ -ரூ 1800- 2200,
பிச்சிப்பூ- ரூ 1700 – 2000,
காக்கரட்டான்-ரூ 800,
செவ்வந்தி – ரூ 200- 230
பட்டன் ரோஸ் -ரூ 250,
கோழிகொண்டை-ரூ 100,
அரளிப்பூ -ரூ 200,
செண்டுமல்லி – ரூ 100,
சம்பங்கி -ரூ 120,
ரோஜாப்பூ (பட் ரோஸ்)-ரூ 130,
பன்னீர் ரோஜா-ரூ 180,
மரிக்கொழுந்து – ரூ 170 ,
மருகு -ரூ 150,
துளசி- ரூ 40 என விற்பனையாகி வருகிறது,திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவு மற்றும் தொடர் பண்டிகை காலம் என்பதால் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வரலாறு காணாத அளவு உயர்ந்து மல்லிகை பூக்களின் விலை 4000 விற்பனையாகி வருகிறது, இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்