திருமூர்த்தி மலையில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு, மலை பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயம் முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம், அடுத்த உடுமலைப்பேட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள திருமூர்த்தி மலையில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் உள்ள குறுமலை குளிப்பட்டி பூச்சி கொட்டாம்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சற்று நேரத்துக்கு முன்பாக தொடர்ந்து கனமழை பெய்துள்ளது.

இந்த மழையின் காரணமாக காட்டாறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, வெள்ளநீர் மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை சூழ்ந்தது. அப்போது இரவு நேரம் என்பதால் அங்கு பக்தர்கள் யாரும் இல்லை.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் கோவில் முழுவதையும் ஆக்கிரமித்து கரைபுரண்டு ஓடுகிறது. அமணலிங்கேஸ்வரர் ஆலயம் தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.