நீலகிரி மாவட்டம், கூடலூர் சேரம்பாடி பஜாரில் இரவு உலா வந்த காட்டு யானை காய்கறி கடைகளை சூரையாடியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு…
பந்தலூர் கூடலூர் பகுதியில் அதிகளவு காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் கிராம பகுதிகளில் வந்து வீடுகளை உடைப்பது, ரேசன் கடைகளை உடைப்பது, மக்களை துன்புருந்துவது என அடுத்தடுத்து சம்பவம் நடந்த வண்ணமே உள்ளது. இப்படி அட்டகாசம் செய்யும் யானைகளை வனத்துறையினர் விரட்டி விட்டாலும் மீண்டும் ஊருக்குள் வருகிறது. இதனை யானை கண்காணிப்பு குழு மூலம் ஊருக்குள் வராமல் விரட்டி விடுவது வழக்கம். இந்நிலையில் பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் சம்சுதின் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இவரது மளிகைக்கடையை நேற்று இரவு ஊருக்குள் உலா வந்த காட்டு யானை உடைந்தது. பின்பு கடையில் உள்ள காய்கறி மளிகை பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தியது. காட்டுயானை உடைக்கும் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கூச்சலிட்டு யானையை விரட்டினர். இதனிடையே வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சம்சுதின் வியாபார சங்க தலைவர்களை நாடினர். நடந்த சம்பவத்தை எடுத்து கூறினார். பின்பு அப்பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் கடைகளை அடைத்து விட்டு பஞ்சாயத்து தலைவரிடம் சம்பவத்தை எடுத்து கூறினர்.
பின்பு சேரங்கோடு பஞ்சாயத்து தலைவர் லில்லிஏலியாஸ், துனை தலைவர் சந்திரபோஸ் போன்றோர் வியாபாரிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுந்தியதால் இறுதியாக பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து சேரம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சுப்புரத்தினம், பந்தலூர் வட்டாச்சியர் கிருஷ்ணமூர்த்தி, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், சேரங்கோடு பஞ்சாயத்து தலைவர் லில்லிஏலியாஸ், துனை தலைவர் சந்திரபோஸ், வருவாய்துறை அருண் சேரம்பாடி வியாபாரசங்கங்கள் போன்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் 15 நாட்களுக்குள் சேதமாக்கிய கடையை சரி செய்து தரவேண்டும். உரிய நஸ்ட ஈடு வழங்க வேண்டும். இல்லை என்றார், வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என வியாபார சங்கத்தலைவர் கூறினார். இடையில் வியாபாரிகள் கூறும் போது இது போன்ற சம்பவங்களில் தான் அலுவலர்களை பார்க்க முடியும் என கூறினார்.