கோவை குன்னூர் மலை இரயில் பாதையில் குட்டியுடன் 10 காட்டுயானைகள் முகாம். தேசிய நெடுஞ்சாலையில் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை.
கோவையில் வனப்பகுதியிலிருந்து காட்டுயானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் ஊர் பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

கோவை மாவட்டம், தடாகம், மருதமலை, மாங்கரை, பேரூர், தொண்டாமுத்தூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது.
மேலும், வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், குன்னூர் பகுதிகளில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதனால், ஊருக்குள் புகும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சமவெளி பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டுயானைகள் உணவு, மற்றும் தண்ணீர் தேடி குன்னூர் நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளன.
மேலும் குன்னூரில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இதனை ருசிக்க காட்டு யானைகள் வருகை துவங்கி உள்ளது.

இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் குன்னூர் ரணிமேடு இரயில் நிலையத்தில் குட்டியுடன் 10 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளது. இந்த காட்டுயானைகள் கூட்டம் மலைபாதையில் காட்டேரி பூங்கா அருகே சாலையை கடந்தது.
ஆனால் செல்ல வாய்புள்ளதாலும் இரவு நேரங்களில் காட்டுயானைகள் கூட்டம் சாலையை அடிக்கடி கடந்து செல்ல வாய்புள்ளதாலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வனத்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.