திண்டிவனம் அருகே சாவு வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம். அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலிசார் விசாராணை.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாவு வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது திடிரென்று மின்சாரம் பாய்ந்து ஏற்படும் விபத்தில் 12 பேர் காயமடைந்து, அருகில் உள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாத்தனூர் கிராம பகுதியைச் சேர்ந்த தேவன் வயது 31 என்பவர், கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.

இவரது சாவில் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு சாவு வீட்டில் அழுதனர். அப்போது உடல் வைக்கப்பட்டு இருந்த பிரீசர் பாக்ஸில் இருந்து எதிர்பாராத விதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அந்த சாவில் அழுது கொண்டிருந்த குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர், மின்சாரம் பாய்ந்து எட்டியான் மகன் பகவான் வயது 27 மற்றும் அய்யம்மாள் வயது 55 மற்றும் அஞ்சலை வயது 40 மற்றும் பத்மாவதி வயது 45 மற்றும் கௌரி வயது 60 மற்றும் சந்தியா வயது 28 மற்றும் வெண்ணிலா வயது 39 மற்றும் மஞ்சுளா வயது 45 ஆகியோர் உள்ளிட்ட 12 பேர் மீது மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டனர்.

பின்னர் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்துச் சென்று, அருகில் உள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தொடர்பான சம்பவங்களை ரோசனை காவல் நிலைய போலீசார் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். தெவன் என்பவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.