திருமணம் நடக்க இருந்த நேரத்தில் கர்ப்பிணி காதலியை தேடி ஓடிய சென்னை மாப்பிள்ளையை திருச்செந்தூரில் போலீசார் மீட்டனர்.
சென்னை புது பெருங்குளத்துறை சேர்ந்த விக்னேஷ் என்கின்ற வெங்கடசாமி வயது 29 என்பவருக்கும் சேலத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மாதம் இறுதி வாரத்தில் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு இருந்தது. சேலம் அஸ்தம்பட்டி உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்த நிலையில் முடிந்தால் திருமணம் என்ற நிலையில் மாப்பிள்ளை திடீரென தலைமறைவாகி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருமண வீட்டார். எல்லா இடங்களிலும் தேடிய நிலையில் மாப்பிள்ளை அதிகாலை 5 மணி அளவில் வேட்டி பனியனுடன் அக்குளுக்குள் சட்டையை மடக்கி வைத்து துக்கொண்டு வேகமாக வெளியே சென்றது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. புது மாப்பிள்ளை தப்பிச் செல்ல காரணம் என்ன என்பது தெரியாமல் இரு வீட்டாரும் தவித்து போனார்கள்.

இது தொடர்பாக புது மாப்பிள்ளையின் தந்தை அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி திருச்செந்தூரில் பதுங்கி இருந்த புது மாப்பிள்ளை விக்னேஷ் போலீசார் பிடித்து சேலம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன விக்னேஷுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென இறந்து போனதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல நிறுவனத்தில் விக்னேஷ் வேலைக்கு சேர்ந்தார். அப்போது கேரளாவைச் சேர்ந்த இன்ஜினியரிங் படித்த பெண்ணும் வேலைக்கு சேர்ந்தார். நட்பாக பழகிய இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்களது காதல் விக்னேஷின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆனால் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்க இருக்கும் விவகாரத்தை காதலித்து விக்னேஷ் தெரிவிக்கவில்லை. திருமண வரவேற்பு முடிந்த நிலையில் இரவு நேரத்தில் காதல் செல்போனில் எதேச்சையாக பேசி உள்ளார். அப்போது அவர் ஒரு மாத கர்ப்பமாக இருப்பதாகவும், இதனை தனது வீட்டில் தெரிவிக்க போவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அப்பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் காதலிக்கு துரோகம் விளைவித்து விடக்கூடாது என்பதற்காக யாருக்கும் தெரியாமல் திருமண வீட்டிலிருந்து வெளியேறியது தெரியவந்தது. கடைசியாக பேசிய செல்போன் என்னை வைத்து போலீசார் பேசியதில் காதலியை யார் எனவும் கண்டுபிடித்தனர். திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற விக்னேஷ் கோயில் கோயிலாக சென்று விட்டு கர்ப்பிணி காதலியை பார்க்க சென்று உள்ளார். கடைசியாக திருச்செந்தூர் சென்ற போது போலீசில் சிக்கி உள்ளார். இந்த விவகாரத்தில் புது மாப்பிள்ளை என் தந்தை மகனை காணவில்லை எனக்கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். புதுப்பெண் வீட்டில் இருந்து யாரும் எந்தவித புகார் கொடுக்கவில்லை. அவர்களுக்கு இழப்பீடு கொடுத்து சமாதானம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.