என்ன நடக்கிறது மேற்கு வங்காளத்தில்? மக்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் – பாஜக

1 Min Read
நாராயணன் திருப்பதி

என்ன நடக்கிறது மேற்கு வங்காளத்தில்? மக்கள் தாக்கப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் என பாஜக மாநில துணை செயலாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,””என்ன நடக்கிறது மேற்கு வங்காளத்தில்? மக்கள் தாக்கப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள், நேர்மையான, அமைதியான, சுதந்திரமான தேர்தலை நடத்த முடியாமல் தன் கடமையிலிருந்து மாநில தேர்தல் ஆணையம் தவறி விட்டது.ஒரு பஞ்சாயத்து தேர்தலில் இவ்வளவு பெரிய வன்முறை, பதட்டம், ரத்தக்களரி நடைபெறுவது மேற்கு வங்காள அரசுக்கு வெட்கக்கேடு.இந்த தேர்தல் நிறுத்தப்பட வேண்டும்” என்கிறார் மேற்கு வங்காள நீதிபதி அம்ரிதா சின்ஹா.

ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் சுட்டு கொலைசெய்யப்படுவது. கற்பழிக்கப்படுவது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள்.ஆனால், அந்த கட்சிகளின் தலைவர்கள் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க பீகார் சென்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.   இதற்கு மேலும் மம்தாவோடு கூட்டு சேர வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் துடித்தால் சொந்த கட்சி தொண்டர்களுக்கே துரோகம் செய்யும் ரத்தக்காட்டேரிகள் என்றே அழைக்கப்படுவார்கள்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review