இராமநாதபுரம் , தள்ளிவிடப்பட்ட விவகாரம் – டிடிவி கண்டனம்

1 Min Read
டிடிவி

இராமநாதபுரம் தள்ளிவிடப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”இராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய முஸ்லீம் கட்சி எம்.பி நவாஸ் கனி ஆகியோரின் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களை சமாதானம் செய்ய முயன்ற மாவட்ட ஆட்சியர் தள்ளிவிடப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பொது இடத்தில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழவேண்டுமே தவிர, அவர்களது ஆதரவாளர்களைக் கொண்டு அநாகரிகமாக நடந்து கொள்வது நல்லதல்ல.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இருதரப்பினரின் ஆதரவாளர்கள் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

அரசு விழாக்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில் இப்போது நடந்திருப்பது அநாகரீகத்தின் உச்சமாகும். இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review