தண்ணீர் கேன் ஏஜென்சி உரிமையாளர் சந்தேகத்துக்கிடமாக இறந்து கிடந்ததார்.

1 Min Read
  • தண்ணீர் கேன் ஏஜென்சி உரிமையாளர்
    சந்தேகத்துக்கிடமாக இறந்து கிடந்ததார்.

பின்னந்தலையில் தாக்கி ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடந்ததால் கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன் புறம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி மகன் தம்பு சாமி (வயது 55) இவர் பட்டுக்கோட்டை கைகாட்டி அருகில் முத்துப்பேட்டை சாலையில் தண்ணீர் கேன் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

தண்ணீர் கேன் கடை நடத்தி வரும் தம்புசாமி என்பவர் பட்டுக்கோட்டை நகரம் முத்துப்பேட்டை ரோட்டில் மெரினா வாட்டர் என்ற பெயரில் குடி தண்ணீர் பாட்டில் வியாபாரம் செய்யும் கடை வைத்துள்ளார். அவரது மகன் காளிதாஸ்‌ (வயது29) என்பவர் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

இன்று காலை 4 மணி அளவில் வெளியூர் பங்சனுக்கு செல்ல வேண்டும் நண்பர் ஒருவர் வருகிறார் என்று வீட்டில் சொல்லிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதேபோல் கடையில் வேலை பார்க்கும் பெண்மணியிடம் நாளை நான் வெளியூர் செல்வதால் கடைக்கு வேலைக்கு முன்னதாக வர சொல்லி கூறியுள்ளார்.

இந்நிலையில் கடை ஊழியர் வந்து காலை 8 மணி அளவில் கடையை திறந்த பொழுது கடையில் தம்புசாமி இறந்து கிடப்பதை பார்த்து அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொன்னதின் பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்த தம்புசாமி உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, அவர் இறப்பிற்கான காரணத்தை விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இறந்து கிடந்த தம்புசாமியின் பின் தலையில் ரத்தம் வடிந்து காயம் ஏற்பட்டுள்ளது, முகம் தாக்கப்பட்டு வீங்கி இருந்தது எனவே இவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த தம்புசாமிக்கு சுஜாதா என்ற மனைவியும் காளிதாஸ் என்ற மகனும் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர்.

Share This Article
Leave a review