விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் சிறுவாடி ஊராட்சியில் தெருவில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றாததை கண்டித்து, வார்டு உறுப்பினர் தண்ணீரில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்ந்து ஓய்ந்தது. இதன் காரணமாக மரக்காணம் மூன்று மாதம் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதே போன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செருவாடி ஊராட்சியில் ஏழாவது வார்டில் உள்ள உசேன் நகர் பகுதியில் மழை நின்று இரண்டு தினங்கள் ஆகியும் தெருவில் மழைநீர் தேங்கி நின்று உள்ளது.

இது சம்பந்தமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஏழாவது வார்டு உறுப்பினர் அப்பாஸ் கானிடம் முறையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர் செயல்பாடு ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கேட்கின்ற மழை நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று ஏழாவது வார்டு உறுப்பினர் அப்பாஸ் கான் உசைன் நகர் பகுதியில் தேங்கிய மழைநீரில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காதது தான் காரணமாக வார்டு உறுப்பினர் அப்பாஸ்கான் தனது சொந்த செலவில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தேங்குகின்ற மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் மரக்காணம் ஒன்றிய மேற்பார்வையாளர் சமூகம் ஆகியோர், தண்ணீர் தேங்கி நின்ற இடத்தில் பார்வையிட்டு மழை நீரை முழுவதுமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இனி வரும் காலங்களில் அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை வார்டு உறுப்பினர் அப்பாஸ் கான் கைவிட்டார்.