தமிழ்நாட்டில் சக்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்..!

2 Min Read

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அடிப்படை ஊதியம் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 3,500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை முதலமைச்சர் பரிசினை செய்து ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார். கருப்பு விவசாயகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உற்பத்தி ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை, கரும்பு நிலுவைத் தொகை, ஊதியம், போனஸ், அத்தியாவசிய செலவினங்களுக்கு என மொத்தமாக ரூபாய் 1223.59 கோடி அளவிற்கு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

மேலும் சர்க்கரை ஆலை இணைபடுத்தும் பொருட்டு எம்.ஆர்.கே. மற்றும் கள்ளக்குறிச்சி 1 சர்க்கரை ஆலைகளில் எத்தனால் ஆளை அமைக்கும் பணியும் கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இணை மின் திட்ட பணிகளுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு மீதமுள்ள ஆறு கூட்டுறவு சக்கரை ஆலைகளிலும் இணை மின் திட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வின் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 35 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன் 30.9.2022 வரையிலான காலத்திற்கு நல்லெண்ணத் தொகையாக நிரந்தர தொழிலாளி ஒருவருக்கு ரூபாய் நாற்பதாயிரம் முதல் அம்பதாயிரம் மற்றும் பருவ கால தொழிலாளர்களுக்கு 32,000 முதல் 40 ஆயிரம் வரை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

மேலும் 1.10.2022 முதல் தற்போது வரை உள்ள காலத்திற்கு நிலுவைத் தொகையின் ரொக்கமாகவும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் வழங்கிய உள்ள ஊதிய உயர்வை ஏற்று அனைத்து கூட்டங்களும் மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மேலும் லாபகரமாக இயக்கிட தங்களது பங்களிப்பை அனைத்து தொழிலாளர்களும், பணியாளர்களும் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review