விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி – முதன் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்..!

2 Min Read
முதன் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக முதன் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர். நான்காவது முறையாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அரசன்.

- Advertisement -
Ad imageAd image

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பு மனு தாக்கல் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி – முதன் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்

அப்போது முதன்முதலாக இன்று காலை உளுந்தூர்பேட்டை தொகுதியை சேர்ந்த அரசன் என்கிற முதியவர் நாடாளுமன்ற தொகுதிக்கு சுயேட்சியாக வேட்பு மனு தாக்கல் செய்ய ஆட்சியரகம் வந்திருந்தார். இது அவருக்கு நான்காவது முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பாக தெரிவிக்கிறார்.

இது மட்டுமல்லாமல் நான்கு முறை சட்டமன்றத்திற்கும் போட்டியிட்டு உள்ளார். மேலும் நான்கு முறை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவருக்கும் போட்டியிட்டு உள்ளார்.

முதன் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்

அதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவது லட்சியமாக கொண்டு உள்ளார். அரசன் கல்வி அறிவு தனக்கு முற்றிலும் இல்லை என்றும் தான் நீண்ட நாட்களாக விவசாய கூலியாக வேலை செய்து வந்ததாகவும் தனக்கு இரண்டு பிள்ளைகள் மூன்று பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைந்து என் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கம் தான்.

முதன் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்

அப்போது தேர்தலில் வெற்றி பெற்றால் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை இலவச சைக்கில் ஐந்தாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை மோட்டார் சைக்கிளும் வழங்குவேன்.

விவசாயக் கூலிகள், முதியோர், காவலர்கள் என அனைவருக்கும் தற்போது இருக்கும் ஊதியம் ஓய்வூதிய தொகையை விட பத்து ரூபாய் அதிகமாக வழங்குவேன். இது தொடர்பாக நான் வெற்றி பெற்றால் யார் பிரதமராக அமைந்தாலும் அவரிடம் காலில் வணங்கி இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்கிறார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி – முதன் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்

கடந்த முறை பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அரசன் 16 ஆயிரம் வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த முறை பலாப்பழம், ஆப்பிள், மின்விசிறி ஆகிய சின்னங்களை கேட்டுள்ளதாகவும் அரசன் தெரிவிக்கிறார்.

Share This Article
Leave a review