தமிழகத்தின் பல பகுதிகளில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்காத நிலை தொடர் போராட்டமாக இருந்துவருகிறது.
அரசு தலையிட்டு அவற்றை சரி செய்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை தீமிதி விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
இரவு 9. 45 மணியளவில் மேல்பாதி பகுதியைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் திடீரென கோயிலில் வழிபாடு நடத்த உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறினர். மீறி அங்கு சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறி அப்பகுதி மக்கள் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அனுமதி மறுக்கப்பட்டவர்கள் பட்டியல் இன மக்கள். நேரடியாகவே சாதி பெயரை சொல்லியே அவர்கள் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகின்றனர். சிறிது நேரத்தில் அந்த இடம் கலவர பூமியாக தோன்றியது. பின்னர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா நேரில் சென்று அங்கு விசாரணை மேற்கொண்டார் இதனால் சம்பவ இடத்தில் பதற்றம் தணிந்ததது.
பின்னர் சமாதானமாக பேசுவதற்கு இரண்டு தரப்பிலும் அழைக்கப்பட்டனர் விழுப்புரம் ஆர்டிஓ தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கோவில் உள்ளே பாரபட்சமின்றி அனைவரும் வழிபடவும் திருவிழா நடத்தவும் அனுமதிக்க வேண்டுமென ஒரு தரப்பு கோரிக்கை வைத்தது.
கோயிலில் அனைத்து தரப்பினரும் வந்து வழிபடுவதால் யாருக்கும் தடையில்லை சிலர் வேண்டுமென்றே பெண்களிடம் கிண்டல் செய்வதால் பிரச்சினை ஏற்படுகிறது இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர்.
அதிகாரிகள் தரப்பில் கோயில் விழாக்களின் போது அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு அமைதி காத்து ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து இரு தரப்பும் கிராமத்தில் அனைவரிடமும் கலந்து பேசி கருத்து தெரிவிப்பதாகவும் அதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்து சென்றனர்.
பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காதது பெரும் குற்றம். இது பற்றி சமாதானம் பேசுவதற்கு அழைக்கப்பட்ட அரசு தரப்பில் இருந்து எந்த தீர்வும் வழங்கப்படாமல் ஏமாற்றம் அடைந்தனர் பட்டியல் இன மக்கள். தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு அனைவரும் கோயிலுக்குள் செல்ல அனுமதி பெற்று தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் பொதுமக்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.