தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வரலாறு காணாத அளவிற்கு தக்காளி விலை உயர்வு ஆகியவற்றை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக சார்பில் நகர தலைநகரங்கள் மற்றும் ஒன்றிய தலைநகரங்கள் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என திட்டமிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்தில், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி ஏ டி கலியவரதன் தலைமையில் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக விழுப்புரம் மாவட்ட தலைவர் கலியவரதன். முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பற்றியும் ஏட்டில் எழுத முடியாத அளவிற்கு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் விக்கிரவாண்டி நகர துணை செயலாளர் சித்ரா விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவதூறாக பேசிய விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலியவரதன் மீது அவதூரு வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்தார்.
அந்த புகாரி அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் பகுதியில் இருந்த பாஜக தலைவர் கலியவர்தனை காலை 3 மணி அளவில் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர். அவர் மீது அவதூறு பரப்புதல், கலவரம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.