விஜயகாந்தின் பூத உடலை விட்டு பிரியாமல் இருக்கும் வில்லன் நடிகர், யார் இந்த மன்சூர் அலிகான்..?

3 Min Read
விஜயகாந்த்

தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 24 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே இன்று அதிகாலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில், மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image
விஜயகாந்தின் பூத உடலை விட்டு பிரியாமல் இருக்கும் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்

விஜயகாந்த் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகத்தை அடைந்து, மாலை 4:45 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலை விட்டு இம்மியும் நகராமல் காலடியிலேயே அமர்ந்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். இன்று காலை முதல் விஜயகாந்த் உடலுக்கு அருகிலேயே தவமாய்க் கிடக்கிறார் மன்சூர் அலிகான். நடிகர் விஜயகாந்த் ஏராளமான புதிய இயக்குநர்களையும், நடிகர்களையும் திரைத்துறையில் அறிமுகப்படுத்தி வளர்த்து விட்டுள்ளார். அந்தவகையில், மன்சூர் அலிகானை பெரிய நடிகர் ஆக்கியதில் விஜயகாந்த்தின் பங்கு அளப்பரியது. விஜயகாந்த் படத்தில் மன்சூர் அலிகானின் சண்டைக் காட்சிகள் பிரபலமானதன் காரணமாகவே மன்சூர் அலிகான் பெரிய கவனிப்பைப் பெற்றார்.

விஜயகாந்தின் பூத உடலை விட்டு பிரியாமல் இருக்கும் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்

கூட்டத்தில் ஒரு நடன நடிகராகவும், சண்டை நடிகராகவும் இருந்த மன்சூர் அலிகானை நடிகர் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். அப்படத்தில் அசத்தலான வில்லத்தன நடிப்பை வழங்கி ரசிகர்களை கவனிக்க வைத்தார் மன்சூர் அலிகான். தனக்கு வாழ்வு கொடுத்தவர் என்பதால் விஜயகாந்த் மீது மன்சூர் அலிகானுக்கு எப்போதும் ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு. இந்நிலையில் தான் இன்று விஜயகாந்த்தின் மரணச் செய்தி கேட்டு நொறுங்கிப் போயுள்ளார் மன்சூர் அலிகான். விஜயகாந்த் இறந்த தகவல் தெரிந்ததுமே, நடந்தே விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார். விஜயகாந்த் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது முதல் அவரது உடல் அருகிலேயே இருந்தார். விஜயகாந்த் வீட்டில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு, விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொதுமக்களுடன் சேர்ந்து கண் கலங்கியபடி நடந்தே சென்றார் மன்சூர் அலிகான். தேமுதிக அலுவலகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல் உள்ள பெட்டியின் அருகிலேயே கொஞ்சமும் இம்மி கூட நகராமல் இருந்து வருகிறார் மன்சூர் அலிகான்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

விஜயகாந்த் காலடியிலேயே இருந்து வருகிறார் மன்சூர் அலிகான். காலை முதல் எங்கும் நகராமல், விஜயகாந்த் உடலுக்கு அருகிலேயே இருந்து வருகிறார் மன்சூர் அலிகான். திரையுலகில் எவரையும் விட தான் அதிகம் நேசிக்கும், மதிக்கும் கேப்டன் விஜயகாந்த்தின் இறப்பால் கலங்கிப் போயுள்ள மன்சூர் அலிகானின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. அண்மையில் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உருக்கமான அறிக்கையை வெளியிட்டிருந்தார் மன்சூர் அலிகான். அதில், “அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே! கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? என கதறி அழுது கொண்டு இருக்கிறார் மன்சூர் அலிகான்.

 

 

 

 

Share This Article
Leave a review