மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள்

1 Min Read
மீன்பிடித் திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்தில் மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டு மீன் வகைகளை பிடித்து சென்றனர்.

கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு மீன் பிடிக்க கலத்தில் இறங்கினர், இதனை அடுத்து கண்மாய்க்குள் இறங்கி லாவகமாக ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடிக்கத் துவங்கினர், இதனை அடுத்து கண்மாயில் கெண்டை, சிலேபி, கெழித்தி, அயிரை, குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன் பிடித்து சென்றனர். இந்த மீன் பிடி திருவிழாவால் அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Share This Article
Leave a review