விக்கிரவாண்டி வென்றது திமுக 2 இடம் பாமக, டெபாசிட் இழந்தது நா.த.க.

2 Min Read
வேட்பாளர்கள்

தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் காலி என அறிவிக்கப்பட்ட தொகுதி விக்கிரவாண்டி.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ-வான புகழேந்தி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு கடந்த ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நா.த.க சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். அ.தி.மு.க இந்த தேர்தலை புறக்கணித்தது. மொத்தமாக 82.49 % வாக்குகள் பதிவானது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் பெற்று, 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

- Advertisement -
Ad imageAd image
அன்னியூர் சிவா

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் பெற்று, 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் அன்புமணி 56,026 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி அபிநயா 10,479 வாக்குகளும் பெற்றனர்.

அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி வேட்பாளர் அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் சி.பழனி மேற்பார்வையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான மு.சந்திரசேகர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழினை வழங்கினார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்து கருத்து பகிர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அப்பட்டமான விதிமீறலில் திமுக ஈடுபட்டது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி வாங்கிய வாக்கு எங்களுக்கு வெற்றியை கொடுத்தது போல உள்ளது எவ்வளவோ புகார் கொடுத்தும் முறைகேடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது மக்களுக்கு தெரியும் விலை கொடுத்து வாங்கிய வெற்றி திமுகவிற்கு என்றார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் அபிநயா, தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்தி இருக்கவே தேவை இல்லை ஏலம் விட்டு இருக்கலாம் அப்படித்தான் நடந்தது, தேவையில்லாமல் அரசு அலுவலர்கள், காவலர்கள் என அவர்களுடைய நேரத்தையும், உழைப்பையும் வீணாக்கி உள்ளது அரசு. இங்கு ஜனநாயகம் வெல்லும் என்று எதிர்பார்த்து வந்தோம் ஆனால் பணநாயகம் வென்றது ஜனநாயகம் பிணமாய் போனது என்றார்.

Share This Article
Leave a review