சி.வி.சண்முகம்

2011 ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பு பிறகு முதன் முதலில் நடந்தது விக்கிரவாண்டி தொகுதி தேர்தல். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக கூட்டணியில் வழக்கறிஞர் ராமமூர்த்தி 78 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக ராதாமணி 63 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.ராதாமணி உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். அதன் பிறகு நடந்த 2019 இடைதேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக புகழேந்தி 68 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 2021 பொதுத் தேர்தலில் 93 ஆயிரம் வாக்குகள் பெற்று திமுக புகழேந்தி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக முத்தமிழ்ச்செல்வன் 84,000 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.

இந்த நிலையில் புகழேந்தி உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழக்க 2024 தேர்தலை சந்தித்தது திமுக. ஆனால் அதிமுக போட்டியிடவில்லை அதற்கு அதிமுக சொன்ன காரணங்கள் எதுவாக இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத மண்ணில் தான் இருந்தார்கள். திமுகவைச் சேர்ந்த அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி 56 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். 2021 தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக 43%த்தை பெற்றது. 2024 இல் அதிமுக போட்டியிடாமல் யாருக்கும் ஆதரவு இல்லை என்கிற நிலைப்பாட்டில் இருந்தும் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.அவர் பெற்ற சதவீதம் 63%. இதிலிருந்து அவரது வெற்றிக்கு பெரும்பாலும் உதவியது அதிமுக வாக்குகள் தான் என்பது உறுதியானது.

எப்படி என்றால் 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது பாமக, சிபிஎம் ஆகியவையும் தனித்து போட்டியிட்டனர் அப்போது அதிமுக வேட்பாளர் வேலு 31% வாக்குகள் பெற்றார்.இப்போது அதிமுக போட்டியிடவில்லை என்றால் அந்த 31% யாருக்கு சென்றிருக்கும் 5% திற்கு உள்ளாகவே பாமக விற்கு சென்று இருந்தாலும் மீதம் உள்ள சதவீதங்கள் திமுகவுக்கு சென்றது அப்பட்டமாக தெரிந்தது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் 2026 இல் அதிமுக காணாமல் போவதை தவிர வேறு வழி இல்லை. எடப்பாடி மாவட்டம் தோறும் தோல்விக்கான காரணங்கள் பற்றி கருத்து கேட்டு வரும் இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வாக்கு எங்கே சென்றது என்பது பற்றியும் ஆராய வேண்டும். இல்லை என்றால் நாம் ஏற்கனவே சொன்னது போல அதிமுக காணாமல் போகும்.

அன்னியூர் சிவா

மாவட்டத்தை கைக்குள் வைத்திருக்கிறேன் என்று சொல்லும் சி.வி சண்முகம் போன்ற மூத்த அரசியல்வாதிகள் தவறான கொள்கையில் வழி நடத்துவதால் தான் இப்படியான விளைவுகளை அதிமுக சந்திக்கிறது என்ற குற்றச்சாட்டையும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன் வைக்கிறார்கள். இருந்தாலும் அதுவும் உண்மைதான் என்று சிந்திக்க தோன்றுகிறது. எப்படியோ 2026 க்குள்ளாக அதிமுக ஒரு நல்ல முடிவு எடுத்தால் சரிதான்.

ஜோதி நரசிம்மன்.ஆசிரியர்

தி நியூஸ் கலெக்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here