விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்த 4 சுயேச்சை வேட்பாளர்கள்..!

2 Min Read

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதியில் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

வேட்புமனு தாக்கல் செய்ய சில்லறை காசுகளை கொண்டு வந்த வேட்பாளர். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தியாவில் வேட்பு மனு தொகையையும் ஏடிஎம் கார்டு மூலமாகவே பெற வலியுறுத்தி வந்த வேட்பாளர்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிற நிலையில், இன்று காலை 11 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சேலம், திருச்சி, தர்மபுரி, கோவை பகுதியைச் சேர்ந்த 4 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்த வேட்பாளர்

தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் வட்டாட்சியர் யுவராஜ் வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டார். அரசியல் கட்சியினர் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. சேலம் பகுதியைச் சேர்ந்த பத்மராஜன் இதுவரை 242 தேர்தல்களில் எம்.பி, எம்.எல்.ஏ மட்டுமல்லாமல் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு உள்ளார்.

 

வேட்பு மனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்த வேட்பாளர்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு சார்பில் 51 வது முறையாக தேர்தலில் போட்டியிட வந்துள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த நூர் முகமது 44-வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல்

திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் போக்குவரத்து ஊழியரான இவர் டிஜிட்டல் மையம் என்று இந்தியாவில் சொல்லுகின்ற பொழுது டெபாசிட் தொகையையும் ஏடிஎம் கார்டு மூலமாகவே பெற வேண்டும் என்று,

ஏடிஎம் கார்டுகளை மாலையாக அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அனைவரின் வேட்பு மனுக்களும் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பரிசீலனைக்கு பின்பு தான் தெரியவரும்.

Share This Article
Leave a review