விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் இந்த வாரம் அறிவிப்பு..!

1 Min Read

விழுப்புரம் மாவட்டம், அடுத்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்தார். அதை தொடரந்து 8 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் இந்த வாரம் அறிவிப்பு

பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். தற்போது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தல்

அதில் ஒரே கட்டமாக கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி விடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம்

எனவே எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article
Leave a review