தளபதி விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளா, ஆந்திரா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள ரசிகர்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு முன்பே கோட் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திருவண்ணாமலை நகரத்தில் விசில் அடித்து, ஆட்டம். இசையுடன் கொண்டாடி மகிழ்ந்தனர் விஜய் ரசிகர்கள்.
கட்அவுட் பால் அபிஷேகம் மற்றும் மேளதாளங்களுடன் இன்று மூன்று திரையரங்குகளிலும் ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடினார் நடிகர் விஜய் ரசிகர்கள்
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் கோட் (the greatest of all time ) திரைப்படம் வெளியானது.
காலை 8.45 மணிக்கு முதல் சிறப்பு காட்சிகள் திருவண்ணாமலை ஸ்ரீபாலசுப்ரமணி மற்றும் பேரடைஸ் அருணாச்சலம் & சக்தி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
சக்தி தியேட்டர் முன்பு கூடிய விஜய் ரசிகர்கள் விசில் அடித்து, மேலங்கள் இசைக்கு ஏற்ப ஆட்டம் ஆடி, கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிறப்பு காட்சியில் ஒரு டிக்கெட் ரூபாய் 500 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்டது.திருவண்ணாமலையில் மற்றும் மங்கலம் ஒன்பது ஸ்கிரினில் வெளியகி உள்ளது.