விஜயகாந்த் உடலை சென்னை தீவுத்திடலுக்கு மாற்றம்..!

2 Min Read
கேப்டன் விஜயகாந்த்

விஜயகாந்த் உடல் அதிகரிக்கும் இட நெருக்கடியால் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றம்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகத்தை அடைந்து, மாலை 4:45 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்” என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக “மருத்துவப் பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது” என்று தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் இல்லத்தில் குவிந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருக்கும் விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த 11-ஆம் தேதி வீடு திரும்பினார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார்.செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் மருத்துவமனை சென்ற விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் காலமானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கம்பீரமான நடிப்பு கோடிக் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவர், மக்கள் சேவையில் அதிகளவு ஈடுபாடு கொண்டிருந்தார்.கலைஞர் மறையட்டும் ,ஜெயலலிதா மறையட்டும், அதன் பிறகு அரசியல் பற்றி யோசிக்கலாம் என்று பலர் யோசித்த போது, அவர்கள் இருக்கும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை எட்டிவிட்டார். திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக வந்திருப்பதாக அறிவித்த விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2009 மக்களவை தேர்தல்களில் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டார்.அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சத்திலிருந்ததால் அவரது பெயரிலிருந்த காந்த் என்பதை எடுத்து, விஜயராஜ் என்ற பெயரில் இணைத்து விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தார்.”தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள்.

Share This Article
Leave a review