கிராமிய பாடல் பாடி இணையத்தில் வைரலான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற சிறுமிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தருவாதக இசையமைப்பாளர் இமான் ஏற்கனவே உறுதியளித்த நிலையில் தற்பொழுது விஜய் டிவி பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி தொலைபேசி வாயிலாக தர்ஷினியை தொடர்புக் கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் பம்பை உடுப்பை இசைக்கலைஞர். இவரது மகள் தர்ஷினி. இவர் அனந்தமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அந்த பாடலை பாடும் போது கார்த்தி என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த பாடல் வைரல் ஆனதை தொடர்ந்து, இந்த பாடலை சமுக வலைதளங்களில் பார்த்த இசை அமைப்பாளர் டி. இமான் ஏற்கனவே தர்ஷினியின் தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, பாராட்டி வாழ்த்து தெரிவித்து, தனது மகளுக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது, தர்ஷினியிடம் விஜய் டிவி பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி தொலைபேசி வாயிலாக பேச முற்பட்டார். அப்பொழுது தர்ஷினி அவர்கள் பள்ளிக்கு சென்று இருப்பதால் அவருடைய தாயாரிடம் பேசிய தாடி பாலாஜி அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இமானிடம் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் தர்ஷினி. அவர் மிக சிறப்பாக வருவார் என்றும் வாழ்த்தியிருக்கிறார் தாடி பாலாஜி. இது குறித்து தர்ஷினியின் தாயார் கூறுகையில், நடிகர் தாடி பாலாஜியின் வாழ்த்துக்கள் அவரது குடும்பத்திற்கு பெரும் ஊக்கத்தை தந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், விரைவில் தாடி பாலாஜி தர்ஷினியை நேரில் சந்திக்க வருதாகவும் கூறியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.