மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது: தொல் திருமாவளவன் !

1 Min Read
தொல் திருமாவளவன்

மீண்டும் மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மீண்டும் மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது.  இரண்டாயிரம் ரூபாய் பணம் செல்லாதென #ரிசர்வ்_வங்கி அறிவித்துள்ளது.

ஏழைகளிடம் புழக்கமில்லாத பணம் தான் எனினும் இது மதிப்பிழக்கிறபோது அனைத்துத் தரப்பிலும் அதன் பாதிப்பு ஏற்படும். பொருளாதார நிலைத்தன்மையும் பாதிக்கப்படும். உலக அரங்கில் இந்தியப் பொருளாதார நிலைத்தன்மை குறித்த நம்பகத்தன்மை கடுமையாகப் பாதிக்கபடும். தேசியப் பொருளாதாரத்தின் மீதான பெரும் தாக்குதலாகவும் மாறும்.

அரசியல் எதிரிகளை நிலைகுலைய வைப்பதற்கான தந்திரமாக மோடி இதனைக் கருதலாம். ஆனால் இது மக்களுக்கு எதிரான நடவடிக்கையே ஆகும்.

மோடி அரசின் இந்தப் போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review