சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலை..!

1 Min Read

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலை பெற்று வருகிறார். அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 2- வது இடத்திலும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 3-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி 4-வது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

சிதம்பரம் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அரியலூர் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக்கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. செய்தியாளர்கள் அறையில் உள்ள தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளை விசிக வேட்பாளர் திருமாவளவன் பார்வையிட்டார்.

திமுக கூட்டணி

3 சுற்று முடிவில், விசிக வேட்பாளர் திருமாவளவன் – 70,330. அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் – 59,566. பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி -23,813. நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி – 9,594. 3 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளரை விட 10,764 வாக்குகள் கூடுதலாக பெற்று விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.

சிதம்பரம் (தனி) தொகுதி கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். 2004 மக்களவைத் தேர்தல் வரை இந்த தொகுதி சிதம்பரம்,

சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலை

புவனகிரி, காட்டு மன்னார்கோவில் (தனி), மங்களூர் (தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய சட்டபேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கடந்த 2008-ல் தொகுதி மறுசீரமைப்பில் மங்களூர் (தற்போது திட்டக்குடி),

விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டன. அந்த 3 தொகுதிகளுக்கு மாற்றாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் ஆகிய தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a review