வாணியம்பாடியில் தனியார் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள். மாணவர்கள் தனியார் பேருந்தில் படிகட்டில் தொங்கியவாறு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவு செல்வதால் அந்த பேருந்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்து படிக்கட்டில் நின்று கொண்டு தொங்கியவாறு பயணம் செல்கின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தனியார் பேருந்து படிக்கட்டில் நின்று கொண்டு தொங்கியவாறு பயணம் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு இது போன்று ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்கவும் ,பேருந்து மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.