தற்கொலை செய்து கொள்வதற்காக வால்பாறையில் உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறிய தேயிலை தோட்ட தொழிலாளியை காப்பாற்றிய கோயம்புத்தூர் தி நாளிதழில் நிருபர் வில்சன் தாமஸ்.
வால்பாறை அய்யப்பாடியில் உள்ள பாரி அக்ரோ தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் வீரமணி (50) என்ற தொழிலாளி, நிர்வாகம் அவர் மீது எடுத்த நடவடிக்கையை எதிர்த்து அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் இன்று காலை 7.30 மணி அளவில் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பொதுமக்கள், போலீசார் அவரை கீழே இறங்கி வருமாறு சமாதானம் செய்தும் அவர் இறங்கவில்லை. அப்போது அந்த வழியாக வேறு ஒரு செய்திக்காக வந்த வில்சனை பார்த்த போலீசார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் போல் நடித்து அந்த தொழிலாளியிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு உதவி கோரியுள்ளனர்.

இதை அடுத்து, அந்த மின் கோபுரத்தின் கீழே நின்று, தான் ஒரு உதவி ஆணையர் என கூறி, கீழே நின்று உரக்க கத்தி பேசி சுமார் 7 நிமிட பேச்சுவார்த்தையில் அவரை கீழே இறங்க வைத்துள்ளார் வில்சன்.
வில்சனின் இந்த துரித உதவிக்காக, அங்கிருந்த பொதுமக்களும், போலீசாரும் பாராட்டி, நன்றி தெரிவித்துனர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல : சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணுக்கு அழையுங்கள்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் – 044-24640050
மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் – 104