வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை போட்ட வனத்துறையினர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த கேரள எல்லையான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் தொடர் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நீர்வீழ்ச்சியானது தமிழ் ,தெலுங்கு கன்னடம் ஹிந்தி மற்றும் பிற மொழி திரைபடங்களில் இந்த நீர்வீழ்ச்சி இடம் பெற்றுள்ளது. தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள மக்களுக்கு அறிமுகமான நீர்வீழ்ச்சியாகும்.
இந்த பகுதியில் வால்பாறை சோலையார் அணையில் இருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் பெருக்கெடுத்து வரும் ஆற்று தண்ணீர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அடைகிறது.

இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கரைபுரண்டு ஓடும் வெள்ள பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.