வடலூரில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக்கூடாது – அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..!

2 Min Read

தமிழகத்தில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க கூடாது என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

- Advertisement -
Ad imageAd image

தைப்பூச நாளில் உலகம் முழுவதிலும் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வந்து வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதியை தனி பெருங்கருணை என்ற முழக்கங்களை தரிசிக்க தன்னேழுச்சியாக கூடுவார்கள். வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதைக் கண்டு, வடலூர் பார்வதிபுரம் பகுதி மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்த நிலம் தான் 100 ஏக்கர் வடலூர் பெருவெளி ஆகும். இவ்வளவு பெரிய நிலம் இருப்பதால் தான் தைப்பூசத்தன்று வடலூரில் கூடும் பக்தர்கள் எந்த வித சிரமமும் இன்றி பெரும் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பி சென்று செல்கின்றனர். லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் வடலூர் பெருவெளியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை கட்டுவதற்கு, இந்த திமுக அரசு முனைந்துள்ளது.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

இதனை அறிந்து அப்பகுதி மக்கள் தங்களை எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். சர்வதேச ஆய்வு மையத்தை அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் வடலூர் பெருவெளியில் இம்மையத்தை கட்டுவதால் ஜோதி தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள். இப்படி வடலூர் பெருவெளியில் நிலத்தை கையகப்படுத்தினல் மாத பூச வழிபாடும், தைப்பூச சிறப்பு வழிபாடும் தடைபடும். எனவே திமுக அரசு வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் கட்டுவதை விடுத்து வேறொரு இடத்தை தேர்வு செய்து இம்மையத்தை கட்ட இந்த அரசுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

ஆனாலும் அவர்களது வேண்டுகோளை திமுக அரசு புறக்கணித்து வடலூர் பெருவெளியிலேயே சர்வதேச மையம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளி கோரி உள்ளதாக தெரிகிறது. பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் கட்டும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை வருடத்திலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு திமுக அரசு வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Share This Article
Leave a review