இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி உறுதி..!

3 Min Read

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்பி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக மட்டுமின்றி மேலும் சில சிறிய கட்சிகளும் தேர்தல் களப்பணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில காங்கிரஸ் தலைவருமான வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இந்தியா கூட்டணி

பாஜக தனது வேட்பாளரை இறுதி செய்ய திணறி வரும் நிலையில் காங்கிரஸ் ஒரு வாரத்திற்கு முன்பே வேட்பாளரை இறுதி செய்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகிறது.

அதில் புதுச்சேரி வேட்பாளராக வைத்திலிங்கம் நிறுத்தப்படுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி

இதனிடையே நேற்று முன்தினம் டெல்லி விரைந்த வைத்திலிங்கம் எம்பி, அங்கு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்னார். அப்போது நேற்று தொடர்ந்து அங்கேயே முகாமிட்டிருந்த வைத்திலிங்கம் எம்பி.

புதுச்சேரி தேர்தல்கள நிலவரம் தொடர்பாக கட்சியின் முன்னணி தேசிய தலைவர்கள், மேலிட நிர்வாகிகள் சிலரை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரசில் போட்டியிட உள்ள வைத்திலிங்கம் கட்சியிலும், ஏற்கனவே ஆட்சியிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி

கூட்டுறவு வங்கி, மார்க்கெட் கமிட்டி, விவசாயிகள் சங்க தலைவராக பணியாற்றியுள்ள இவர் நெட்டப்பாக்கம் தொகுதியில் 1985, 1990, 1991, 1996, 2001, 2006 காமராஜர் தொகுதியில் 2011, 2016 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர். சபாநாயகர் பதவிகளை வகித்துள்ள வைத்திலிங்கம் 2019-ல் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மேலும் 1,97,025 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை தோற்கடித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி

அதை தொடர்ந்து 2023 முதல் புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றார். இவரது தந்தை வெங்கடசுப்பா ரெட்டியாரும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இதனிடையே புதுச்சேரி தொகுதிக்கான பாஜக வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், நிர்மல்குமார் சுரானா தலைமையில் இறுதிகட்ட ஆலோசனை கூட்டம் இந்திராகாந்தி சிலை அருகிலுள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி

அப்போது அமைச்சர்கள், நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்டு ஜான்குமார், ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன், மாநில தலைவர் செல்வகணபதி, முன்னாள் தலைவர் சாமிநாதன், ஓய்வுபெற்ற ஐ,ஜி சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வேட்பாளராக யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம். அப்போது தேர்தல் பிரசாரம், சாதக, பாதக அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் நமச்சிவாயத்தை முன்னிறுத்தினால் எளிதாக வெற்றி பெறலாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி

அதை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் ராஜிவ்காந்தி சிக்னல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த மேலிட பார்வையாளர் சுரானாவை சந்தித்து பேசினர்.

அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தேஜ கூட்டணி தலைவர் என்ற முறையில் பகிர்ந்து கொண்டனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் புதுச்சேரி பாஜக வேட்பாளர் யார்? என்பதை கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share This Article
Leave a review