மத்திய-மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தொழிற்சங்கங்கள், விவசாயிகள் பேரணி- மறியல்..!

2 Min Read

புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற நிலையில் அவர்களை பாதியிலேயே போலீசார் தடுத்ததால் மறியலில் ஈடுபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, ஒன்றிய அரசு வெளியேறக் கோரியும், புதுச்சேரி தேஜா கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட போவதாக புதுச்சேரி மாநில தொழிற்சங்கங்கள், விவசாயி சங்கங்கள் அறிவித்திருந்தன. அதன்படி நேற்று காலை புதுச்சேரி பாலாஜி தியேட்டர் அருகில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, எல்எல்எப், எம்எல்எப், என்டிஎல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 250 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர்.

கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தொழிற்சங்கங்கள், விவசாயிகள் பேரணி மறியல்

பின்னர் அங்கிருந்து பேரணியாக கோரிக்கை பாதைகைகள், தொழிற்சங்க கொடிகளை கையில் ஏந்தியபடி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டபடி கவர்னர் மாளிகையை நோக்கி முற்றுகையிட பேரணியாக வந்தனர். அவர்களை நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பில், கிழக்கு எஸ்.பி சுவாதி சிங் தலைமையில் பெரிய கடை போலீசார் பேரிகார்டுகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதை அடுத்து தடுப்புகள் மீது ஏறிய தொழிற்சங்கத்தினர், அவற்றை மீறி செல்ல முயன்றதால் போலீசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தடுப்புகளை தாண்டி ஏறி குதித்த தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தொழிற்சங்கங்கள், விவசாயிகள் பேரணி மறியல்

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம், சிஐடியு மாநில செயலாளர் சீனிவாசன், ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து கோரிக்கைகளை முழக்கமிட்ட அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மறியலை அவர்கள் கைவிட மறுக்கவே போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார் அவர்களை கரிக்குடோனுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அனைவரும் பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.

Share This Article
Leave a review