- கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது. இவர்களுக்கு உதவியதாக முல்லை நகரைச் சேர்ந்த விமல் ராஜ் என்பவரும் கைது.இவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் .
கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவ செந்தில்குமார் மற்றும் காவலர்கள் நேற்று கும்பகோணம் பாலக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா பயன்படுத்துவதும், விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையில் இவர்கள் கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியை சேர்ந்த ஸ்ரீராம் (20).மற்றும் கோபால் என்கிற சந்திரகாசு. (19) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு உதவியதாக கும்பகோணம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவது பெற்றோர்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
