பல்வேறு வழக்குகளில் உள்ள ரெளடி வெட்டி படுகொலை. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.

1 Min Read
  • பல்வேறு வழக்குகளில் உள்ள ரெளடி வெட்டி படுகொலை. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.

தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரிச்செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் அறிக்கி என்கின்ற அறிவழகன் (32). இவர் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது தஞ்சையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோவில் வடவாற்று ஆற்றுப் படித்துறையில் அறிவழகன் மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்து மது குடித்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது ஏற்பட்ட தகராறில் அறிவழகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அறிவழகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கொலை நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

Share This Article
Leave a review