2 நாட்களில் இரண்டு விமானிகள் மரணம்! அதிர்ச்சி தகவல்

1 Min Read
வானுர்தி

இரண்டு நாட்களில் இரண்டு விமானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இன்று நாக்பூரில் உள்ள போர்டிங் கேட்டில் இண்டிகோ கேப்டன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், நேற்று கத்தார் ஏர்வேஸ் விமானிக்கு நேற்று விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் .

- Advertisement -
Ad imageAd image

இண்டிகோ கேப்டன் நாக்பூரிலிருந்து புனேவுக்கு விமானத்தை இயக்கவிருந்தார், அவர் போர்டிங் கேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுயநினைவை இழந்தார் . அவரை அங்குள்ள ஊழியர்கள் மீது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில்  அறிவிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து நாக்பூர் வழியாக புனே வரை , பைலட் இரண்டு ஷிபிட்  இயக்கியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 27 மணி நேரம் ஓய்வில்லாமல்  இருந்த விமானத்தை இயக்கிய அவர்  இன்று நான்கு செக்டார்களில் விமானத்தை இயக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதேபோல் டெல்லி-தோஹா விமானத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

கத்தார் ஏர்வேஸ் விமானியான இவர் நேற்று டெல்லி-தோஹா விமானத்தின் பயணிகள் அறையில் கூடுதல் பணியாளராகப் பயணம் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் இதற்கு முன்பு ஸ்பைஸ் ஜெட், அலையன்ஸ் ஏர் மற்றும் சஹாரா நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இந்த உயிரிழப்புகளை உறுதி செய்துள்ளது.

மியாமியில் இருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்ற வணிக விமானத்தின் குளியலறையில் விமானி ஒருவர் சரிந்து விழுந்து சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு பனாமாவில் அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது அப்பொழுது  கேப்டன் இவான் ஆண்டவர் இறந்துவிட்டதாக விமான நிலையத்தில் மருத்துவ நிபுணர்கள் அறிவித்தனர்.

Share This Article
Leave a review