தஞ்சாவூர் அருகே சோகம் பள்ளி மாணவி உட்பட இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு .!

2 Min Read
தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட நிஷாந்தினி

ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பள்ளி தோழிகள் . ஒரு சிறுமி மீட்கப்பட்ட நிலையில் மாயமான சிறுமியை தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

ஒரத்தநாடு அருகே உள்ள மேல உளூர் கிராமத்தில் இருந்து ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர் . அடித்து செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மயமான மற்றொரு சிறுமியை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

மீட்பு பணியில் கிராமமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குமார் இவரது மகள் நிஷாந்தினி வயது (13) . இவர் திருச்சி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார் . சனி ,ஞாயிறு விடுமுறைக்காக தாத்தா வீரன் வீட்டிற்கு நிஷாந்தினி , திருச்சியை சேர்ந்த அவரது தோழி மேனகாவோடு குருங்குளம் கிராமத்திற்கு வந்துள்ளார் .

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/thanjavurs-pappanadu-gang-rape-case-hunger-strike-to-arrest-the-leftover-criminals/

ஞாயிறு மாலை சிறுமிகள் இருவரும் ஆற்றில் துணிதுவைத்து விட்டு குளித்துவிட்டு வருவதாக தெரிவித்து சென்றுள்ளனர் . தூண்களை துவைத்துவிட்டு ஆற்றில் குளிக்க இறங்கியபோது , எதிர்பாராத விதமாக நீரின் சுழற்சி வேகம் அதிகரிக்கவே இரு தோழிகளும் ஆற்றில் அடித்து சென்றதாக கூறப்படுகிறது .

அப்போது அந்த வழியாக வந்த ஆலிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் சிறுமிகளின் கூச்சல் சத்தம் கேட்டு உடனடியாக ஆற்றுக்குள் குதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திருச்சியை சேர்ந்த மேனகா என்ற சிறுமியை காப்பாற்றியுள்ளார்.

மீட்பு பணியில் கிராமமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள்

சிறுமி நிஷாந்தினியை காப்பாற்ற முயற்சி செய்தபோது தண்ணீரின் வேகம் நிறைத்து நிஷாந்தினி தண்ணீரில் முழுவதுமாக முழுகியுள்ளார் . கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தநாடு தீயணைப்பு துறை வீரர்கள் பல மணி நேரத்திற்கு மேலாக தேடியும் சிறுமி நிஷாந்தினியின் உடல் கிடைக்கப் பெறவில்லை . இரவு நேரமானதால் தேடும் முயற்சியை தற்காலிகமாக கைவிட்ட தீயணைப்பு துறை வீர்கள் அங்கிருந்து சென்றனர்.

மீண்டும் காலை சிறுமியின் உடல் தேடும்படி தொடரும் என நிலையை பொறுப்பு அதிகாரி ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு இளைஞர் மரணம் :

இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பாரதி நகரை சேர்ந்தவர் கியாசுதீன் 19. இவர் நேற்று நெடுவாக்கோட்டை கல்யாண ஓடை ஆற்றில் நண்பர்களோடு குளிக்கச் சென்றார்.

அப்பொழுது தண்ணீரில் வேகம் அதிகமாக இருந்ததால் சுழற்சியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய காவலர்கள் காலை தென்னமநாடு அருகே சுழற்சியில் சிக்கி இருந்த கியாசுதீன் உடலை கைப்பற்றினர். உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளதால் கிராமமக்கள் ஆழமான பகுதிகளில் குளிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .

Share This Article
Leave a review