- விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய சில விஷயங்கள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளது. அவர் கூட்டணி குறித்து அவசரப்பட்டு பேசியதுதான் அந்த கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளது.
விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய போது.. நான் ஒரு அரசியல் அணுகுண்டை போட போகிறேன். 2024 சட்டசபை தேர்தலில் நாம் போட்டியிடுவோம். தனித்து மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைப்போம். ஆனாலும் அதற்கு முன் நம்முடன் கூட்டணி வைப்பவர்களுக்கு.. ஆட்சியில் பங்குதருவோம், என்று அவசரப்பட்டு கூறினார்.
இந்த கருத்தை விஜய் சொன்ன போது.. கண்டிப்பாக காங்கிரஸ், விசிக திமுகவிற்கு எதிராக கருத்து சொல்லும். திமுக கூட்டணி உடையும். பதவியில் பங்கு என்று சொன்னால் காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள்.. திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும் என்று எல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயின் கட்சியின் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை.
கட்சியின் கொள்கை அறிவிக்கப்பட்டாலும்.. இன்னும் பல விஷயங்களில் கட்சியின் நிலைப்பாடுகள் அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்க மற்ற கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் பின் வரும் என்று விஜய் நினைத்து இருக்க கூடாது. அவர் கட்சியை நிரூபிக்கும் முன் மற்ற கட்சியினர் தன் பின் வருவார்கள் என்று நினைத்து இருக்க கூடாது. அவருக்கு இந்த கூட்டத்தில் கூட்டணி பற்றி பேச ஆலோசனை வழங்கியது யார்.. என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணிக்கு நோ: உதாரணமாக விசிக எம்பி திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. “அவங்க ஃபாசிசம்’னா நீங்க பாயாசமா ?” என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா? அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக’வையா? காங்கிரசையா? இடது சாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா? பாஜக – சங்பரிவார்களின் ஃபாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா?
தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் “ஃபாசிச எதிர்ப்பு” என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான். இங்கே ஃபாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பாஜக- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் என கூறுகிறாரா? என்ன பொருளில் அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை வெடித்தது ? பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு? , என்று திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார். விசிக விக்கெட் காலியாக.. தற்போது சீமானும் விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தாலும்.. நடிகர் விஜயின் அரசியல் வருகையாலும் எனது வாக்குகள் குறையாது என்று தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களை சந்தித்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒரு நடிகரைப் பார்க்க கூட்டம் அதிகளவு வரும். ஆனால், கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே…
விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள், என்று சீமான் தெரிவித்துள்ளார். முன்னதாக மாற்று அரசியல் மாற்று சக்தி இந்த மாதிரி ஏமாத்துற வேலையெல்லாம் செய்ய மாட்டோம்.. அரசியல் மேடை என்றாலே கொந்தளிப்பாக பேசுவது, உலக வரலாறு, கோட்ஸ்களை எம்பி 3 ஆடியோ போல பேசுவது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளார் நடிகர் விஜய்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/madras-high-court-appoints-representatives-to-investigate-the-issue-of-improvement-of-prison-inmates-facilities/
இது போக மதிமுகவும் விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை நண்பர் விஜய், மதவாத சக்திகளுக்கு இடமளித்து விடக்கூடாது என்று திருச்சி எம்.பி. துரை வைகோ கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. எனவே, தவெக உடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை. எங்களுக்குள் சலசலப்பு, சங்கடம் இருந்தால் இந்த கேள்வியைக் கேட்கலாம். ஆனால், எங்கள் கூட்டணிக்குள் அப்படி எதுவும் இல்லை.