நடிகையின் இடுப்பை கிள்ளி அண்ணாமலை vs விஜய்

டிவிகே தான் திமுகவின் பீ டீம்

2 Min Read

தமிழக வெற்றிக் கழகத்தை முதலில் களத்திற்கு வர சொல்லுங்க.. ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் செஞ்சுட்டு இருக்காங்க. சினிமா சூட்டிங்கில் இருந்து அரசியல் செய்வாங்களா.. சினிமா சூட்டிங்கில் இருந்து கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு, நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். மேலும் டிவிகே தான் திமுகவின் பீ டீம் என்றும் கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

டாஸ்மாக் தலைமை அலுவலத்தில் நடந்த ரெய்டு தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் 1,000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தது. இந்த நிலையில் இந்த டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக இன்று சென்னை எழும்பூர் அருகே பாஜக சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் அனுமதி இல்லை என்று கூறி போலீசார், பாஜகவினரை கைது செய்தனர்.அதன் பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

புஸ்ஸி ஆனந்த்

 

இந்த நிலையில் பாஜக போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம், பாஜக நாடகமாடுவதை விட்டுவிட்டு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. டிவிகே பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அண்ணாமலை கூறியதாவது:- நடிகையின் இடுப்பை கிள்ளிக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தை முதலில் களத்திற்கு வர சொல்லுங்க.. ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் செஞ்சுட்டு இருக்காங்க. சினிமா சூட்டிங்கில் இருந்து அரசியல் செய்வாங்களா.. சினிமா சூட்டிங்கில் இருந்து கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய். திரும்ப எனக்கும் பேசத் தெரியும். தவெகவும் ஒரு லிமிட்டை கிராஸ் செய்யக்கூடாது.என்றார் கோபமாக.

அண்ணாமலை
விஜய்

நானும் தமிழக வெற்றிக் கழகத்தை மரியாதையாக தான் பேசிக்கொண்டிருக்கிறேன். அறிக்கை விடும் போது அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். நான் என்ன விஜய் மாதிரி டேன்ஸ் ஆடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறேனா.. நான் களத்தில் இருந்து போராடிக்கொண்டு, பேசிக்கொண்டு இருக்கிறேன். இது என்ன வொர்க் பிரம் ஹோம் அரசியலா செய்கிறார்.இந்த நிலை நீடிக்க கூடாது என்றார் அண்ணாமலை

Share This Article
Leave a review