விழுப்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சிக்னலில் மோதி விபத்து

1 Min Read
லாரி விபத்து

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் சிக்னலில் கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை.விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது சிக்னல். இந்த பகுதியில் இருந்து சென்னை திருச்சி செல்லும் பேருந்துகள், மற்றும் வாகனங்கள், புதுச்சேரியில் இருந்து திருக்கோவிலூர் திருவண்ணாமலை பெங்களூர் வரை செல்லும் வாகனங்கள்,விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் செல்லுவது வழக்கம்.

- Advertisement -
Ad imageAd image
லாரி அப்புறப்படுத்தப்படுகிறது

நேற்று இரவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மார்க்கமாக சென்று கொண்டிருந்த லாரி முன்னச்சுதிடீரென கழண்டு சிக்னலில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கிரேன் இயந்திரம் மூலம் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாரியின் முன்னெச்சு கழண்டு இந்த விபத்து ஏற்பட என்ன காரணம் என்கிற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரம் என்பதால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் இல்லாததால் பெரும் பாதிப்புகள் எதுவும் இல்லை.
நேற்று இரவு பௌர்ணமி தினம் என்பதால் அதிக அளவில் மக்கள் திருவண்ணாமலையில் இருந்து வந்ததால் சிறிது நேரம் சிக்னல் அருகே லேசான போக்குவரத்து ஏற்பட்டது. பகல் வேளையாக இருந்தால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும்.

பண்டிகை நேரம் என்பதால் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் பணி நியமிக்க வேண்டும் அப்படி நியமிப்பதால் இது போன்ற விபத்துகள் ஏற்படும் போது அப்புறப்படுத்த வசதியாக இருக்கும்.அது போல வாகன ஓட்டிகளுக்கும் இரவு நேரப்பணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Share This Article
Leave a review