மருதமலை அருகே திருநங்கை வெட்டிக்கொலை – போலீசார் விசா …

2 Min Read

கோவை மாவட்டம், மருதமலை அருகே இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது திருநங்கை தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், அடுத்த தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் வயது (37). திருநங்கையான இவர், மருதமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள மாசிலாமணி வயது (33) என்ற திருநங்கை அவரது வீட்டிற்கு தினந்தோரும் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது மாசிலாமணி மற்றும் அவருடன் தங்கி இருக்கும் மணி, திருநங்கையான தனலட்சுமி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று தனலட்சுமி மதியம் மாசிலாமணி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மூவரும் வீட்டில் இருந்த நிலையில், அப்போது மாசிலாமணி மற்றும் மணி இருவரும் மாலை 4 மணிக்கு வெளியே சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

பின்னர் இருவரும் இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக மாசிலாமணி அருகே உள்ள வடவள்ளி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடவள்ளி ஆய்வாளர் கண்ணையன் தலைமையிலான காவல்துறையினர் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறகு போலீசார் மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் எல்லா இடங்களிலும் சோதனைகளை மேற்கொண்டனர்.

வடவள்ளி காவல் நிலையம்

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாநகர காவல் துறை ஆணையர் சரவணகுமார் மற்றும் உதவி ஆணையர் ரவிக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், கொலையாளியையும் தேடி வருகின்றனர். திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review