கரூர் அருகே இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி உள்ளன.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கல்வார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 35). இவர் கட்டிடம் கட்டும் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயா (வயது 30). இவரும் கட்டிட தொழிலாளி வேலையை செய்து வருகிறார். இந்த தம்பதி திருமணமாகி இரண்டு குழந்தைகளான 11 வயதில் பிருந்தா என்ற மகளும், 8 வயதில் சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரை விட்டு கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர். நேற்று காலை வழக்கம் போல் இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று விட்டனர். அதற்கிடையே கணவன் மனைவி இருவரும் வீட்டினுள் தனியாக இருந்தனர்.

இதனால் பள்ளிக்கு குழந்தைகள் சென்றதால் ஐயப்பன், ஜெயா தம்பதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். இவர்கள் இருந்தது அக்கம் பக்கத்தினர் யாருக்கும் தெரியாது. பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக சந்தோஷ் வீட்டிற்கு வந்தான். அவன் வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டிப் பார்த்தும் யாரும் திறக்கவில்லை. இதுகுறித்து சந்தோஷ் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக கதவை திறக்கச் சொல்லி சத்தம் போட்டனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். வந்தவர்களுக்கு அதிர்ச்சி வீட்டினுள்ளே ஐயப்பன் ஜெயா தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கரூர் வெங்கமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து என்ன காரணத்திற்காக இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். தம்பதிகள் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது குடும்பப் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகளும் அதே பகுதியில் உள்ள ஐயப்பனின் அண்ணன் முறையான கொடியரசன் என்பவரது பராமரிப்பில் உள்ளனர். பிள்ளைகளை தவிக்க விட்டு இருவரும் இறந்து போனது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.