திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே காட்டு மாடுகள் விரட்ட சென்ற போது மின் வேலியில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. இதனை தொடர்ந்து காட்டு பன்றிகள் வராமல் இருக்க வைத்திருந்த மின் வேலியில் சிக்கி இருவர் பலியானது ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் வன விலங்குகளை விரட்ட வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம்,1 வது தார்வழி பகுதியை சேர்ந்தவர் ஜெய்குமார் வயது (52) மற்றும் அவருடைய உறவினர் வெங்கடேசன் என்கிற மணி வயது (23) ஆகியோர் இதில் மணிக்கு திருமணமாக வில்லை. ஜெயக்குமாரும், மணியும் தங்களுடைய சொந்தமான நிலத்தில் காட்டு மாடுகளை விரட்டுவதற்காக நேற்று இரவு 7 மணி அளவில் சென்றுள்ளனர்.

அப்போது மணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காட்டு பன்றி, மாடு போன்ற விலங்குகளை விரட்டுவதற்காக மின் கம்பி மூலம் மின்சாரம் வைத்துள்ளார். இதை அடுத்து அந்த நிலத்தின் வழியாக சென்ற ஜெயக்குமார் மற்றும் மணி ஆகியோர் மின் கம்பி மூலம் மின்சாரம் வைத்ததை கவனிக்காமல் சிக்கி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதை அடுத்து நிலத்துக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வரவில்லை என உறவினர்கள் தேடி சென்று பார்த்த போது தான் இருவரும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளனர் என தெரியவந்தது.

அதனை கண்ட உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து நகர காவல் நிலைய போலீசாருக்கு புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து நிலத்தின் உரிமையாளர் மணி உறவினர்களிடம் நகர காவல் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.